/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செவிலிய அதிகாரி பதவி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடுசெவிலிய அதிகாரி பதவி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
செவிலிய அதிகாரி பதவி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
செவிலிய அதிகாரி பதவி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
செவிலிய அதிகாரி பதவி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு
ADDED : பிப் 25, 2024 04:15 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 155 செவிலிய அதிகாரி பதவிக்கான நியமனத்திற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் மற்றும் காத்திருப்பு பட்டியல் வெளியிட்பட்டது.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 155 செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, புதுச்சேரி, காரைக்காலில் - 136, மாகே - 18, ஏனாம் - 1 என காலி இடங்களுக்கு இடஒதுக்கீடு பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், செவிலிய அதிகாரி பதவிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் மற்றும் காத்திருப்போர் பட்டியல் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
தற்காலிக தேர்வு பட்டியலில், பாரதி 100க்கு 95 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், அகல்யா (94.33) 2ம் இடம், கிரிஸ்டிரெபேகல் (94.27) 3ம் இடம், கலைமதி (94.14) 4ம் இடம், ரோஸ்மேரி (93.43) பெற்று 5ம் இடத்தை பிடித்துள்ளனர்.
தற்காலிக தேர்வு பட்டியலில் பொது -77, ஓ.பி.சி. - 17, எம்.பி.சி. - 28, எஸ்.சி - 22, பி.சி.எம். - 3, இ.பி.சி. - 3, எஸ்.டி.- 1, இடபிள்யூஎஸ் - 1 என 155 பேர் இடம் பெற்றுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் பொது - 26, ஓ.பி.சி - 9, எம்.பி.சி. - 12, பி.சி.எம் - 2, இ.பி.சி - 2, எஸ்.சி - 11, எஸ்.டி-1 என, 63 பேர் இடம் பெற்றுள்ளனர்.
சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு செய்திக்குறிப்பு:
செவிலிய அதிகாரி பதவிக்கான நியமனத்திற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தற்காலிகமாக தேர்வு செய்யப் பட்டோரின் கல்வி, தொழில் நுட்ப தகுதி, வயது, குடியிருப்பு, சாதி மற்றும் செவிலியர் கவுன்சிலில் பதிவு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு உள்ளிட்ட அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் வழங்கிய விவரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இப்பதவிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சான்றிதழை சரிபார்க்கும் போது, விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல் தவறானது கண்டறியப்பட்டால், தற்காலிக தேர்வு எந்த அறிவிப்புமின்றி உடனே ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.