ADDED : ஜன 05, 2024 06:41 AM

நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தொடர் நோயாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு துணை சபாநாயகர் ராஜவேலு நிதி உதவி பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.நிகழ்ச்சியில், நல ஆய்வாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.