/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கல்
மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கல்
மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கல்
மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கல்
ADDED : ஜூன் 20, 2025 02:56 AM

புதுச்சேரி, : ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கினார்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி பா.ஜ., சார்பில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் விழா நடந்தது.
ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குருசுக்குப்பத்தை சேர்ந்த 600 மீனவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
விழாவில், ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த ஆனந்தகண்ணன், சீனிவாசன், விஜயகுமார், பிரகாஷ், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.