/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உற்பத்தி மானியம் விவசாயிகளுக்கு வழங்கல்உற்பத்தி மானியம் விவசாயிகளுக்கு வழங்கல்
உற்பத்தி மானியம் விவசாயிகளுக்கு வழங்கல்
உற்பத்தி மானியம் விவசாயிகளுக்கு வழங்கல்
உற்பத்தி மானியம் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : ஜன 31, 2024 05:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் 2023-24ம் ஆண்டு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ. 5ஆயிரம் வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் வேளாண்துறை மூலம் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்குவதற்கு பதில் உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2023-24ம்ஆண்டு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 வீதம் 2,417 விவசாயிகளுக்கு,3,845.05 ஏக்கருக்கு ரூ. 1 கோடியே 92 லட்சத்து 25 ஆயிரத்து 250 உற்பத்தி மானியம்,அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
சட்டசபை முதல்வர் அலுவலகத்தில் நடந்த துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு காசோலையை வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், மற்றும் வேளாண்துறை இயக்குனர் வசந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.