ADDED : ஜூன் 05, 2025 07:20 AM

புதுச்சேரி; காலாப்பட்டு தொகுதி முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் மூலம் காலாப்பட்டு தொகுதி கணபதி செட்டிக்குளம், பெரிய காலாப்பட்டு, சின்னக் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி கிராம அங்கன்வாடி மையங்களில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகளை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். இதில், சமூக நலத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.