Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ் 2 வில் முன்னேற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ் 2 வில் முன்னேற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ் 2 வில் முன்னேற்றம்


UPDATED : மே 09, 2026 12:10 AM

ADDED : மே 08, 2026 11:50 PM

Follow on Google

UPDATED : மே 09, 2026 12:10 AM ADDED : மே 08, 2026 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து, 37 வது இடத்திலிருந்து 25 வது இடத்திற்கு முன்னேறியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 123 அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, 8,105 மாணவர்கள், 8,684 மாணவிகள் என மொத்தம் 16,789 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 7,484 மாணவர்கள் (92.34 சதவீதம்), 8,341 (96.05 சதவீதம்) மாணவிகள் என, மொத்தம் 15,825 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.26 ஆகும். மாநில தரவரிசை பட்டியலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 25 வது இடம் பெற்றுள்ளது.

28 பள்ளிகள் 'செண்டம்' அரசு பள்ளிகளின் தேர்ச்சி 92.48 சதவீதம். கடந்தாண்டு தேர்ச்சி சதவீத்தை விட கூடுதலாக 4.23 சதவீதம் பெற்றுள்ளது. அரசு பள்ளிகளின் மாநில தரவரிசையில் கடந்தாண்டு 34ம் இடத்திலிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்தாண்டு 22வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கரடிசித்துார், நெடுமானுார், சவுந்தரவள்ளிபாளையம், மேலுார் மாதிரி பள்ளி, விளந்தை, எலவனாசூர்கோட்டை, ஏ.குமாரமங்கலம், கொட்டபுத்துார் மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி ஆகிய 8 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 20 தனியார் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 28 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பாட வாரியான தேர்ச்சி மொழிப் பாடத்தில் 98.67 சதவீதம், ஆங்கிலத்தில் 97.86, இயற்பியல் 98.54, வேதியியல் 98.06, உயிரியல் 99.42, தாவரவியல் 97.99, விலங்கியல் 98.95, புள்ளியியல் 100, கணினி அறிவியல் 99.63, புவியியல் 100, நர்சிங் ஜெனரல் 100, கணிதம் 99.23, வீட்டு அறிவியல் 100, வரலாறு 97.66, பொருளியல் 97.31, வணிகவியல் 95.93, கணக்குபதிவியல் 97.13, சிறப்பு தமிழ் 100, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 98.91, கணினி பயன்பாடு 99.78 சதவீதம் என பாடவாரியாக அதிகளவில் மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னேற்றம் பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்தாண்டு 90.96 சதவீத தேர்ச்சியுடன் மாநில தரவரிசையில் 37வது இடத்தில் இருந்தது. இந்தாண்டு கூடுதலாக 3.3 சதவீத தேர்ச்சி பெற்று, 25வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்ததுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap