/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம்
ADDED : செப் 18, 2025 03:03 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில், உயர்கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் எதிரில் வாயில் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்குப் பேராசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். போராட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அரசு கல்லுாரிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில், புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், பிராந்தியங்களில் இருந்து யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் கடந்த 2002 முதல் 2018 வரை தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டுள்ள உதவி பேராசிரியர்களுக்கு கடந்த 20ஆண்டுகளாக புதுச்சேரி அரசால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.இவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவின் ஊதியம் உயர் கல்வித்துறையில் அமுல்படுத்தவில்லை. சில பேராசிரியர்கள் நீதிமன்றத்தை அணுகி, சம்பள சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என, நீதிமன்ற உத்தரவினை பெற்று வந்தனர். இதனையும் அரசு செயல்படுத்தவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.