/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : செப் 22, 2025 02:41 AM

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி காங்., சார்பில், காமராஜர் நகரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2வில், (2024--2025) கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கும் விழா, பிரின்ஸ் ஹாலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, காமராஜர் நகர் தொகுதி காங்., பொருப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.
மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி.,முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், காங்., முன்னாள் தலைவர் சுப்ரமணியன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, அகில இந்திய காங்., சமூக ஊடக துறை அமைப்பாளர் டோலி சர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் தொகுதியைச் சேர்ந்த 700 நபர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.