/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12.22 லட்சம் மோசடி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12.22 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12.22 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12.22 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12.22 லட்சம் மோசடி
ADDED : செப் 20, 2025 06:46 AM
புதுச்சேரி : தனியார் நிறுவன ஊழியரிடம், ரூ.12.22 லட்சம் கடனாக பெற்று மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
பிச்சைவீரன் பேட், புதுநகரைச் சேர்ந்தவர் காளிதாஸ், 32; தனியார் நிறுவன ஊழியர். இவரிடம், முதலியார்பேட்டை, பட்டாம்மாள் நகரை சேர்ந்த லஷ்மணன் மகன் அன்பு என்பவர், அறிமுகமாகி, தான் தங்க நகைகளை மறு அடகு வைக்கும் தொழில் செய்து வருவதாகவும், அதில் நல்ல லாபம் வருவதாக கூறியுள்ளார். தனது தொழிலை பெரிதுபடுத்த கடனாக பணம் கொடுத்து உதவும்படி கேட்டுள்ளார்.
இதை நம்பிய, காளிதாஸ் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை பல்வேறு தவணைகளாக 12 லட்சத்து 22 ஆயிரத்து 200 ரூபாய் கொடுத்துள்ளார். அதன்பின், காளிதாஸ், அன்புவிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, சரியாக பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதற்கிடையே, அன்பு தனது குடும்பத்துடன் அவர், வசித்து வந்த வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காலி செய்து கொண்டு, தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து, காளிதாஸ் அளித்த புகாரின் பேரில், அன்பு மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தலைமறைவாகியுள்ள அன்பு, இதுபோன்று பலரிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.