நவதுர்கா பள்ளிக்கு முதல்வர் விருது
நவதுர்கா பள்ளிக்கு முதல்வர் விருது
நவதுர்கா பள்ளிக்கு முதல்வர் விருது
ADDED : ஜன 31, 2024 05:21 AM

புதுச்சேரி : திருவாண்டார்கோவில் நவதுர்கா ஆங்கில மேல்நிலைப் பள்ளிக்கு முதல்வர் விருதை கவர்னர் தமிழிசை வழங்கினார்.
புதுச்சேரி, திருவாண்டார்கோவில் ஸ்ரீநவதுர்கா ஆங்கில மேல்நிலைப் பள்ளி,பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்து வருகிறது. கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவி சத்யஸ்ரீ 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தார்.
கடந்த 26ம் தேதி புதுச்சேரியில் நடந்த 75வது குடியரசு தின விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மாணவர்களை தேர்வுக்கு அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காகவும், பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தற்கும் பாராட்டி இப்பள்ளிக்கு முதல்வர் விருது,புதுச்சேரி பேராயர் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தரின் சுழற்கேடயங்களை, கவர்னர் தமிழிசை வழங்க, பள்ளி நிர்வாகி சத்யா நடராஜன், துணை முதல்வர் விவேக் நடராஜன் பெற்றுக்கொண்டனர்.