/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால், ஏனாம் ஜிப்மர் கட்டடங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்காரைக்கால், ஏனாம் ஜிப்மர் கட்டடங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்
காரைக்கால், ஏனாம் ஜிப்மர் கட்டடங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்
காரைக்கால், ஏனாம் ஜிப்மர் கட்டடங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்
காரைக்கால், ஏனாம் ஜிப்மர் கட்டடங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்
ADDED : பிப் 25, 2024 04:51 AM
ஜிப்மர் காரைக்கால் வளாக கட்டடம், ஏனாம் ஜிப்மர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைப் பிரிவினை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஜிப்மர் காரைக்கால் வளாகம், ஆகஸ்ட் 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் 50 எம்.பி.பி.எஸ். மாணவர்களுடன் தற்காலிக கட்டடங்களில் இயங்கி வருகிறது.புதுச்சேரி அரசு நிரந்தர வளாகத்தை அமைப்பதற்காக 67.33 ஏக்கர் நிலத்தை இரண்டு கட்டமாக ஒதுக்கியது.ஜிப்மர் காரைக்கால் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, 2021 பிப்ரவரியில் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று 25ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்க உள்ளார்.இதேபோல் ஏனாமில் அரசு பொது மருத்துவமனையில் ஜிப்மர் கடந்த 2021ம் ஆண்டில் ரூ.91 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைப் பிரிவு அமைக்க முடிவு செய்தது. புதுச்சேரி அரசு வழங்கிய 0.9 ஏக்கர் நிலத்தில், 90 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 20 ஐ.சி.யூ.,படுக்கைகள் மற்றும் மூன்று அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.