/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில கிரிக்கெட் போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை மாநில கிரிக்கெட் போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை
மாநில கிரிக்கெட் போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை
மாநில கிரிக்கெட் போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை
மாநில கிரிக்கெட் போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை
ADDED : ஜூன் 14, 2025 11:20 PM

புதுச்சேரி : கல்வித்துறை சார்பில், நடந்த கிரிக்கெட் போட்டியில் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை சார்பில், மாநில பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாநிலத்தில் இருந்து 18க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று விளையாடினர். இதில் ரெட்டியார்பாகளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அனிஷ், யுகமாறன், கிேஷார், விஸ்வநாத், நரேந்திரன், ஜனார்த்தனன், மாதேஷ், ஜோயல் திமாஷ், கவுசிகன், ரமணா, பொதிகை வேந்தன் அடங்கிய அணி, முதல் பரிசை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், நிர்வாகி ஜெயந்திராணி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் ஆரோக்கியதாஸ், உயர்கல்வி ஆசிரியர்கள் வேல்முருகன், மகேந்திரன், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.