/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணவெளி ராதா பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்மணவெளி ராதா பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
மணவெளி ராதா பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
மணவெளி ராதா பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
மணவெளி ராதா பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
ADDED : ஜன 30, 2024 11:26 PM

புதுச்சேரி : புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளிக்கு முதல்வர் விருதை கவர்னர் தமிழிசை வழங்கினார்.
புதுச்சேரியில் அரசு சார்பில், ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வி துறையின் மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மாணவர்களை தேர்வுக்கு அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முதல்வர் விருது மற்றும் கல்வி அமைச்சர் விருதை, குடியரசு தின விழாவில் கவர்னர் தமிழிசை வழங்க, பள்ளி நிர்வாகி பெர்லின் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார்.
விருதுபெற்ற நிர்வாகிக்கு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பள்ளி நிர்வாகி நன்றி தெரிவித்தார்.


