/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் துறைமுகத்தை அரசு கண்காணிக்க வேண்டும் பி.ஆர்.சிவா வலியுறுத்தல் காரைக்கால் துறைமுகத்தை அரசு கண்காணிக்க வேண்டும் பி.ஆர்.சிவா வலியுறுத்தல்
காரைக்கால் துறைமுகத்தை அரசு கண்காணிக்க வேண்டும் பி.ஆர்.சிவா வலியுறுத்தல்
காரைக்கால் துறைமுகத்தை அரசு கண்காணிக்க வேண்டும் பி.ஆர்.சிவா வலியுறுத்தல்
காரைக்கால் துறைமுகத்தை அரசு கண்காணிக்க வேண்டும் பி.ஆர்.சிவா வலியுறுத்தல்
ADDED : மார் 26, 2025 03:50 AM
புதுச்சேரி: சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது:
காரைக்கால் துறைமுகத்தில் தனியார் துறைமுகம் 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு குறைந்த வருமானம் தான் வருகிறது. துறைமுகத்தில் புதுச்சேரியை சேர்ந்த எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்பதை அரசு யோசித்து பார்க்க வேண்டும்.
தற்போதுள்ள தனியார் துறைமுகம் அதானி துறைமுகமாக மாற இருக்கிறது. இது அரசுக்கு தெரியுமா என்பதை தெரிவிக்க வேண்டும்.
இந்த துறைமுகத்தில் இருந்து அரசிற்கு வருமானம் வரும் சூழ்நிலையில், யார் இந்த துறைமுகத்தை கண்காணிக்கின்றனர் என்பதை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இந்த துறைமுகத்தில் இருந்து அரசுக்கு வருமானத்தை அதிகரிப்பதோடு, கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.