/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொங்கல் விழா கொண்டாட்டம்: பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் பரிசளிப்புபொங்கல் விழா கொண்டாட்டம்: பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் பரிசளிப்பு
பொங்கல் விழா கொண்டாட்டம்: பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் பரிசளிப்பு
பொங்கல் விழா கொண்டாட்டம்: பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் பரிசளிப்பு
பொங்கல் விழா கொண்டாட்டம்: பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் பரிசளிப்பு
ADDED : ஜன 13, 2024 06:59 AM

புதுச்சேரி : கீழ்புத்துபட்டு பகுதியில் பொதுமக்கள் பங்கேற்ற பொங்கல் விழாவில், பா.ஜ.,முன்னாள் தலைவர் சாமிநாதன் பரிசு வழங்கினார்.
புதுச்சேரி மாநில பா.ஜ .,முன்னாள் தலைவர் சாமிநாதன், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை, கிராம மக்களுடன் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இந்தாண்டு மெகா பொங்கல் விழா நடத்த ஏற்பாடு செய்தார்.
முதல்கட்டமாக, காலாப்பட்டு அருகே, தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு பராசக்தி அம்மன் கோவிலில், நேற்று காலை பொங்கல் விழா நடந்தது. விழாவில், பாரம்பரியான முறையில் பொங்கல் வைத்து, வழிப்பட்டனர். மேலும், பெண்களுக்கு கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் பரிசு வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், கீழ்புத்துப்பட்டு சாவடி லதா, ரமணி, தேவகி, முதலியார் குப்பம் சீதா, கோமதி, வசந்தி, மஞ்சக்குப்பம் கலைச்செல்வி, வினுமதி, விஜயலட்சுமி, சிந்துஜா, கெங்கை நகர் செல்வி, கவிதா, குப்பு, அனிச்சங்குப்பம் சத்யா, பாபிக்கா, சாந்தி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் விநாயகர் கோவிலில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது.