Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமபந்தி விருந்துக்கு வழிகாட்டிய புதுச்சேரி; 280 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ சங்கமம் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....

சமபந்தி விருந்துக்கு வழிகாட்டிய புதுச்சேரி; 280 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ சங்கமம் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....

சமபந்தி விருந்துக்கு வழிகாட்டிய புதுச்சேரி; 280 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ சங்கமம் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....

சமபந்தி விருந்துக்கு வழிகாட்டிய புதுச்சேரி; 280 ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவ சங்கமம் அந்த நாள் ஞாபகம்.... நெஞ்சிலே வந்ததே....

ADDED : மே 24, 2025 11:22 PM


Google News
இன்றைய காலத்தில் அனைவரும் சமம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 'சமபந்தி விருந்து' பரவலாக நடத்தப்படுகிறது. இந்த சமபந்தி விருந்திற்கு 280 ஆண்டுகளுக்கு முன்பாகவே புதுச்சேரி தான் விதைபோட்டு வழிகாட்டியாக இருந்துள்ளது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியொரு வரலாற்று சமத்துவ சம்பவம் புதுச்சேரியில் தான் வியப்பளிக்கும் வகையில் நடந்தேறியுள்ளது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா. இது நம்ப முடியாத உண்மை தான். ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் இந்த புதுமையை புகுத்தியது பிரெஞ்சியர் ஆட்சிகாலத்தில் பெரிய துபாசியாக, அதாவது மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலியார்.

ஆனால், இந்த மகிழ்ச்சிக்கும் புதுமைக்கும் பின்னால் ஒரு சோக சம்பவமும் புதையுண்டு இருக்கிறது. அவருடைய 21 வயதுடைய ஒரே மகன் அகால மரணமடைய துபாசியின் குடும்பம் நிலை குலைந்துபோனது. அதுவும் இளம் மனைவியை விட்டுவிட்டு அவர் உயிர் பிரிந்தது புதுச்சேரியையே சோகமடைய செய்தது.

இந்த சோக சம்பவம், பெரும் இழப்பு துபாசியின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இறைப்பணியில் அவருடைய கவனம் திரும்பியது. இதனால் உழவர்கரை கிழக்கில் ரெட்டியார் பாளையத்தில் சேந்த் ஆன்திரே என்ற பெயரில் தேவாலயத்தை எழுப்பினார். புதிய தேவாலயங்களை தெய்வபணிக்கு அர்ப்பணிக்கும்போது தெய்வசிலைகளை பூஜை செய்து விழாவாக கொண்டாடுவது வழக்கம். எனவே பெரிய விழாவாக விருந்து கொண்டாட்டாத்திற்கும் ஏற்பாடு செய்தார்.

இது கிறிஸ்துவ மதத்தை சார்ந்த விழா என்பதால் கிறிஸ்துவர்களை மட்டும் அழைத்தாலே போதும். ஆனால் அங்கு தான் துபாசியின் சமத்துவ சிந்தனை வெளிப்பட்டது. புதுச்சேரியில் வாழ்ந்த அனைத்து பகுதி மக்களும் ஜாதி, மதம், இனம் வேறு பாடின்றி அழைக்கப்பட்டனர். இந்தியர்களோடு நிற்கவில்லை. பிரெஞ்சியர்களையும் அழைத்தார்.

இந்த விருந்திற்கு புதுச்சேரியே திரண்டு வந்திருந்தது. கவர்னர் டுப்ளே அவரது மனைவியுடன் வந்திருந்தார். எல்லோருக்கும் தடபுடலாக உணவு பரிமாறப்பட்டது. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு சாயங்காலம் புறப்பட்டு சென்றர்னர்.

இந்த சமபந்தி விருந்து சம்பவம் 1745 நவம்பர் 30ம் தேதி புதுச்சேரியில் நடந்ததாக நாட்குறிப்பில் ஆனந்தரங்கப்பிள்ளையும் பதிவு செய்துள்ளார். பல ஜாதிகளை சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் கூடி உண்ணுவதென்பது 280 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனையில் கூட செய்து பார்க்க முடியாத விஷயம்.

அதுவும் பல ஜாதி மக்களோடு, பல மதத்தினரும், இந்தியர், ஐரோப்பியர் என பல இனத்தினரும் ஒரே இடத்தில் ஒன்றாய் கூடி ஒன்றாய் நின்று உணவருந்திய தருணம் வரலாற்றில் வேறு எங்காவது அக்காலத்தில் நடத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

சமூக மத நல்லிணக்கம் புதுச்சேரியில் இப்போது மட்டும் அல்ல, அந்த காலத்திலும் சிறந்த உதாரணமாகவே இருந்து வந்துள்ளதை இந்த வரலாற்று சம்பவம் அழுத்தமாக உணர்த்துகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us