/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலி கம்பெனி பெயரில் 'கரண்ட் அக்கவுண்ட்' வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை போலி கம்பெனி பெயரில் 'கரண்ட் அக்கவுண்ட்' வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
போலி கம்பெனி பெயரில் 'கரண்ட் அக்கவுண்ட்' வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
போலி கம்பெனி பெயரில் 'கரண்ட் அக்கவுண்ட்' வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
போலி கம்பெனி பெயரில் 'கரண்ட் அக்கவுண்ட்' வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஜூன் 13, 2025 03:27 AM

புதுச்சேரி: சைபர் குற்றங்களுக்கு துணை போனால் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என வங்கி அதிகாரிகளை, போலீசார் எச்சரித்துள்ளனர்.
பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுக்க, வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறுவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கர் தலைமை தாங்கினார்.
இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் சுப்ரமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் அதிகாரிகள் 35 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பேசுகையில், உங்கள் (வங்கி) வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்யும் சைபர் குற்றவாளிகளை கைது செய்யவும், அவர்கள் இழந்த பணத்தை மீட்டிட வங்கி அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
அதற்கு நாங்கள் (போலீசார்) கேட்கும் ஆவணங்களை உடனுக்குடன் வழங்கினால் மட்டுமே குற்றவாளிகளை விரைவாக பிடிக்க முடியும். பணத்தையும் மீட்க முடியும்.
எந்த வங்கிகளும் கே.ஒய்.சி.,யை வழங்குவதில்லை. கேட்கும் தரவுகளை வழங்க 15 நாட்களுக்கு மேல் காலம் கடத்துகின்றனர். மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஐ.எம்.பி.எஸ்., ஆர்.டி.ஜி., மற்றும் என்.இ.எப்.டி., ஆகியவற்றின் ஐ.பி., பதிவுகளை பெறுவதில் பெரும் சிரமமாக உள்ளது.
வட இந்திய வங்கி கணக்குகளை முடக்க 5 நாட்களுக்கு மேலாகிறது. அதற்குள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி நபர்கள் எடுத்து விடுகின்றனர். ஏ.டி.எம்.,களின் சி.சி.டி.வி., பதிவுகள் விரைவாக கிடைப்பதில்லை.
கிரெடிட் கார்டு அனைத்து வங்கிகளிலும் வெவ்வேறு பிரிவுகளால் கையாளப்படுவதால், இந்த பிரிவுகளுக்கு நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அனைத்து வங்கி மேலாளர்களுக்கான வாட்ஸ் ஆப் குழு உருவாக்க வேண்டும்.
'கரண்ட் அக்கவுண்ட்' துவங்கும் போது அதற்கான ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். சைபர் குற்றவாளிகளக்காகவே போலி கம்பெனி பெயரில் கரண்ட் அக்கவுண்ட் துவங்கி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு வங்கி அதிகாரிகள் துணைபோனால், அவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டனர்.