/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்திற்கு இடையூறு போலீசார் வழக்குப் பதிவு போக்குவரத்திற்கு இடையூறு போலீசார் வழக்குப் பதிவு
போக்குவரத்திற்கு இடையூறு போலீசார் வழக்குப் பதிவு
போக்குவரத்திற்கு இடையூறு போலீசார் வழக்குப் பதிவு
போக்குவரத்திற்கு இடையூறு போலீசார் வழக்குப் பதிவு
ADDED : ஜூன் 14, 2025 12:31 AM
பாகூர்: போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த அயனிங் சென்டர் விளம்பர பலகைகளை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் காட்டுக்குப்பத்தை சேர்ந்த முருகன் மீது வழக்குப் பதிந்தனர்.
இதேபோல், போக்குவரத்திற்கு இடையூராக அரியாங்குப்பம் - மணவெளி சாலை சந்திப்பு பகுதி அருகே ைஹட்ராலிக் கிரேன் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின் உரிமையாளர் ஆகாசம்பட்டை சேர்ந்த கண்ணன் 54; என்பவர் மீது கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.