/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீசார், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்போலீசார், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்
போலீசார், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்
போலீசார், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்
போலீசார், பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம்
ADDED : பிப் 12, 2024 06:44 AM

வில்லியனுார்: வில்லியனுாரில்போலீசார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடந்தது.
வில்லியனுாரில் கடந்த சில தினங்களாக தொடர் திருட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் வகையில், பொதுமக்கள் மற்றும் போலீசார் நல்லுறவுக் கூட்டம் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பயிற்சி ஐ.பி.எஸ்., அதிகாரி வைபவ் மீனா தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, குமார் முன்னிலை வகித்தனர். வில்லியனுார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் வில்லியனுார் பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய கஞ்சா புழக்கம் தான் காரணம். கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் வைக்கப்படும் பேனர் கலசாரத்தை ஒழிக்க வேண்டும்.
வில்லியனுார் மாட வீதிகள் மற்றும் பைபாசில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை, சந்தேக நபர் குடியிருப்பு உள்ளிட்ட தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்கவேண்டும் என, போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.