/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாலிபரை கத்தியால் வெட்டிய நான்கு பேருக்கு போலீஸ் வலைவாலிபரை கத்தியால் வெட்டிய நான்கு பேருக்கு போலீஸ் வலை
வாலிபரை கத்தியால் வெட்டிய நான்கு பேருக்கு போலீஸ் வலை
வாலிபரை கத்தியால் வெட்டிய நான்கு பேருக்கு போலீஸ் வலை
வாலிபரை கத்தியால் வெட்டிய நான்கு பேருக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 06, 2024 06:10 AM
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி சண்முகாபுரம், நாகாத்தம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 21; பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவில் வீதியில் நண்பர் தாமரைச்செல்வன், 20; என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு ஒரே பைக்கில் வந்த சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரைச் சேர்ந்த சந்துரு, திலாஸ்பேட்டை ரஞ்சித், விஜய், ஆகாஷ் ஆகிய நால்வரும் பார்த்திபனிடம் சென்று, எலி (எ) தினகர் என்பவரை பார்த்தியா என கேட்டுள்ளனர். அதற்கு, பார்க்கவில்லை என கூறிய பார்த்திபனை, ஆகாஷ் மற்றும் ரஞ்சித் இருவரும் கத்தியால் வெட்டினர். இதில், இரு கையிலும் வெட்டு காயம் ஏற்பட்டது. காயமடைந்த பார்த்திபன் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மேட்டுப்பாளையம் போலீசார் சந்துரு, ஆகாஷ், ரஞ்சித், விஜய் ஆகிய நால்வர் மீதும் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.