Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏட்டுவை தாக்கிய போலீஸ் டிரைவர் கைது

ஏட்டுவை தாக்கிய போலீஸ் டிரைவர் கைது

ஏட்டுவை தாக்கிய போலீஸ் டிரைவர் கைது


ADDED : டிச 05, 2024 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 06:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போலீஸ் மோட்டார் வாகன பிரிவில் ஏட்டுவை தாக்கிய போலீஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி போலீஸ் மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றும் சீனியர் டிரைவர்களுக்கும், அங்குள்ள போலீஸ் உயர் அதிகாரிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வந்தது.வயதான சீனியர் டிரைவர்களை உயர் அதிகாரிகள்டார்ச்சர் செய்வதாக உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர்.

அடுத்த சில நாட்களில் சீனியர் டிரைவர்களுக்கு மெமோ வழங்கப்பட்டது. இந்நிலையில், போலீஸ் மோட்டார் வாகன பிரிவு டிரைவர் கங்காதரன், 59;தனது கோரிக்கை தொடர்பாக துறை ரீதியாக விண்ணப்பம் அளித்துள்ளார். தனது விண்ணப்பம் அனுப்பட்டு விட்டதா என அங்குள்ள ஏட்டு ஜெயச்சந்திரனிடம் கேட்டார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. ஜெயச்சந்திரன் காயமடைந்தார். ஜெயச்சந்திரன் டி.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் திட்டுதல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கங்காதரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us