/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்
கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்
கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்
கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : ஜன 03, 2024 06:32 AM

திருக்கனுார் : திருக்கனுார் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருக்கனுார் பஜார் வீதியின் இருபுறம் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஒயின்ஷாப் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பொதுப்பணித்துறை மூலம் வணிகர் வீதி வழியாக 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் மூலம் திருக்கனுார் - மண்ணாடிப்பட்டு செல்லும் சாலை, சிவன் கோவில் எதிரே வண்ணாங்குளத்தில் சென்று சேர்கிறது.
கழிவுநீர் செல்லும் வாய்க்கால் கடந்த சில மாதங்களுக்கு முன், துார்வாரப்பட்டது. ஆனால், பொதுப்பணித் துறை ஊழியர்களின் போதிய பராமரிப்பு இல்லாததால், அந்த வாய்க்காலில் மீண்டும் செடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், மழையின் போது இந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல வழியின்றி அருகிலுள்ள குடியிருப்புகளுள் புகும் சூழல் உள்ளது.
மேலும், கழிவுநீர் சென்று சேரும் இடத்தின் அருகே அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும், அடைப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.