/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 7ம் தேதி புனித பாதயாத்திரைலட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 7ம் தேதி புனித பாதயாத்திரை
லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 7ம் தேதி புனித பாதயாத்திரை
லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 7ம் தேதி புனித பாதயாத்திரை
லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 7ம் தேதி புனித பாதயாத்திரை
ADDED : ஜன 04, 2024 03:25 AM
புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்று கிழமை புனித பாதயாத்திரை நடக்கிறது.
27ம் ஆண்டு புனித பாதயாத்திரை வரும் 7ம் தேதி காலை 6:00 மணிக்கு திருக்கோவிலுார் ஸ்ரீமத் எம் பெருமானார் தேஹளீச ராமானுஜாச்சார்யர் ஜீயர் சுவாமிகளின் இடத்தில் இருந்து, புறப்பட்டு, புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக, தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி ஸ்ரீலட்சுமி நரசிம்ம கோவிலை சென்றடைய உள்ளது.இந்த பாதயாத்திரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திருமாலடியார்கள் 30க்கும் மேற்பட்ட பஜனை குழுக்கள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஏற்பாடுகளை மன்றத்தின் தலைவர் இளங்கோ, பொருளாளர் வாசுதேவன், துணை தலைவர்கள் சுப்ரமணியம், பூவராகவன், செயலாளர் விட்டல் உட்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.