/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு அமைக்க மனு தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு அமைக்க மனு
தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு அமைக்க மனு
தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு அமைக்க மனு
தொழில்நுட்ப பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு அமைக்க மனு
ADDED : மார் 23, 2025 04:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவை அமைத்து பதிய உறுப்பினர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்க தலைவர் பாலசுப்ரமணியன் கவர் னருக்கு அனுப்பிய மனு;
சென்டாக் கமிட்டியின் தலைவரை கல்வித்துறை செயலாளர் அல்லது சுகாதாரத்துறை செயலாளர் இருவரில் ஒருவரை நியமிப்பது வழக்கம்.
கடந்த 2017ம் ஆண்டு இருந்த கவர்னர் கிரண்பேடி சென்டாக் கமிட்டியை திருத்தி அமைத்தார்.
அதன்படி கல்வித்துறையின் இயக்குனரோ அல்லது உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனரை நியமிப்பது நடைமுறைக்கு வந்தது.
சென்டாக் நிர்வாகத்தை முழுமையாக நடத்திச் செல்ல திறமையும், தகுதி யும் வாய்ந்த நபர்களை சென்டாக் கன்வீனராக நியமிக்க அரசு உரிய பரிந்துரையை செய்ய வேண்டும்.
தொழில்நுட்ப கல்லுாரி யின் துணை வேந்தர் பதவி காலம் வரும் 2026ம் கல்வி ஆண்டில் நிறைவுபெற உள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஆட்சி மன்றக்குழுவை அமைத்து குழு உறுப்பினர் களை நியமிக்க உடனே உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.