/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழக எதிர்க்கட்சி தலைவர் குறித்த அவதுாறு கார்ட்டூனை நீக்க கோரி மனு தமிழக எதிர்க்கட்சி தலைவர் குறித்த அவதுாறு கார்ட்டூனை நீக்க கோரி மனு
தமிழக எதிர்க்கட்சி தலைவர் குறித்த அவதுாறு கார்ட்டூனை நீக்க கோரி மனு
தமிழக எதிர்க்கட்சி தலைவர் குறித்த அவதுாறு கார்ட்டூனை நீக்க கோரி மனு
தமிழக எதிர்க்கட்சி தலைவர் குறித்த அவதுாறு கார்ட்டூனை நீக்க கோரி மனு
ADDED : ஜூன் 22, 2025 02:08 AM

புதுச்சேரி : தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குறித்தஅவதுாறு கார்டூனை சமூக வளைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் எனஅ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது தலைமையில், நிர்வாகிகள், டி.ஐ.ஜி., சத்ய சுந்திரத்திடம் அளித்த மனு:
தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமியை தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அவதுாறாக சித்தரித்து கார்டூன் வரைந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இச்செயலை தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக உள்ள தமிழக அமைச்சர் ராஜா செய்துள்ளார்.
இது புதுச்சேரியில் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.
தி.மு.க.,வை சேர்ந்த சில விஷமிகள் இதை திட்டமிட்டு பகிர்ந்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. அவர் தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு செயலாளராக இருப்பதால் இந்த செயலுக்கு அவரே முழுப்பொறுப்பு என்ற அடிப்படையில் அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ், புதுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் இருந்து அவதுாறு கார்டூனை நீக்க வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
புகாரை பெற்றுக்கொண்டடி.ஐ.ஜி., உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச் செயலாளர் நாகமணி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுதர்சன் உடனிருந்தனர்.