Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் பயிற்சி 

 வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் பயிற்சி 

 வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் பயிற்சி 

 வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் பயிற்சி 

 வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் பயிற்சி 

ADDED : மார் 18, 2026 04:52 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு மனுதாக்கல் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி சட்டசபை தேர்தலை கடந்த 15ம் தேதி அறிவித்தது. ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முன்தினம் முதல் பெறப்படும் என, அறிவிக்கபட்டது.

இந்நிலையில் வேட்பு மனுக்களைப் பூர்த்தி செய்வது, மனுக்களுடன் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்துதல், பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்தல் மற்றும் வேட்புமனு சமர்ப்பிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று மதியம், கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலையில் நடந்தது.

நிகழ்ச்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.