Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'மக்கள் இலவசங்களை விரும்பவில்லை' தேவநீதிதாஸ் பேச்சு

 'மக்கள் இலவசங்களை விரும்பவில்லை' தேவநீதிதாஸ் பேச்சு

 'மக்கள் இலவசங்களை விரும்பவில்லை' தேவநீதிதாஸ் பேச்சு

 'மக்கள் இலவசங்களை விரும்பவில்லை' தேவநீதிதாஸ் பேச்சு

 'மக்கள் இலவசங்களை விரும்பவில்லை' தேவநீதிதாஸ் பேச்சு

ADDED : பிப் 06, 2026 05:22 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் இலவசங்களை விரும்பவில்லை என, முன்னாள் கவர்னர் கிரண்பேடியின் செயலராக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவநீதிதாஸ் பேசினார்.

புதுச்சேரி வளர்ச்சி பார்வை என்ற பெயரில் நடந்த மாநாட்டில் அவர் பேசியதாவது;

பிற மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பிற மாநிலங்களுக்கான அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் யூனியன் பிரதேசங்களின் அதிகாரம் நாடாளுமன்றத்தில் 1963ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது.

புதுச்சேரியின் அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை புதுச்சேரி மாநில மக்களுக்கு மட்டுமின்றி, 140 கோடி இந்தியர்களுக்கும் உள்ளது. காரணம் இது மத்திய அரசின் ஆட்சிப் பகுதியாக உள்ளது.

மக்கள் இங்கு இலவசங்களை விரும்பவில்லை. அதே நேரம் மருத்துவம், கல்வி போன்ற, இலவசங்கள் அரசியல் அமைப்பில் உறுதி அளிக்கப்பட்டவை.

புதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி அவர்கள் சொந்த பொருளாதாரத்தில் நிற்க செய்யும்போது, அவர்களே இந்த இலவசங்களை வேண்டாம் என மறுத்துவிடுவர்.பல கவர்னர்களிடம் பணியாற்றியுள்ளேன். கவர்னர்களை சந்திக்க வேண்டும் என்றால், பல உயர் அதிகாரிகளை கடந்து அனுமதி பெற்று செல்லவேண்டும், அந்த படிநிலைகளை உடைத்து, நேரடியாக மக்களை சந்தித்தவர் கிரண் பேடி' என்றார்.