/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மூலக்குளத்தில் நிழற்குடை திடீரென மாயமானதால் பயணிகள் பரிதவிப்பு! அந்த தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கருக்கு தெரியுமா?மூலக்குளத்தில் நிழற்குடை திடீரென மாயமானதால் பயணிகள் பரிதவிப்பு! அந்த தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கருக்கு தெரியுமா?
மூலக்குளத்தில் நிழற்குடை திடீரென மாயமானதால் பயணிகள் பரிதவிப்பு! அந்த தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கருக்கு தெரியுமா?
மூலக்குளத்தில் நிழற்குடை திடீரென மாயமானதால் பயணிகள் பரிதவிப்பு! அந்த தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கருக்கு தெரியுமா?
மூலக்குளத்தில் நிழற்குடை திடீரென மாயமானதால் பயணிகள் பரிதவிப்பு! அந்த தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கருக்கு தெரியுமா?
ADDED : ஜன 05, 2024 06:34 AM

புதுச்சேரி :மூலக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை திடீரென மாயமாகி விட்டதால், பஸ் ஏறுவதற்காக காத்திருக்கும் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில், மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் ஆர்ச் அருகே பிளாட்பாரத்தில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த பயணியர் நிழற்குடை சமீபத்தில் திடீரென மாயமாகி விட்டது.
நிழற்குடை இருந்த இடம் தற்போது வெறும் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இதனால், பஸ் ஏறுவதற்காக வருகின்ற பயணிகள் திறந்தவெளியில் காத்திருந்து பரிதவித்து வருகின்றனர்.
கடும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பஸ் ஏறும் அவலம் அரங்கேறி உள்ளது.
மேலும், பிளாட்பாரத்தில் இருந்த நிழற்குடை மாயமாகி விட்டதால், நடுரோட்டிலேயே நின்று முண்டியடித்து பஸ் ஏறுகின்றனர்.
பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பஸ் ஏறுவதால் விபத்து அபாயமும் எழுந்துள்ளது.
இந்த பகுதியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் முகப்பை மறைப்பதால், வியாபாரிகளுக்கு இடையூறாக இருந்த நிழற்குடை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்கள் தினந்தோறும் படுகின்ற சிரமமும், அவதியும் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வான சிவசங்கருக்கு தெரியுமா?
சம்பந்தப்பட்ட துறையான பொதுப்பணித் துறையின் அமைச்சரான லட்சுமிநாராயணனுக்கு தெரியுமா? இந்த சாலை வழியாக தினசரி சென்று வருகின்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்காவது மக்கள் படும் சிரமங்கள் புரியுமா?
நிழற்குடை மாயமாகி பல மாதங்கள் கடந்து விட்டது. இனியும் தாமதம் செய்யாமல், அதே இடத்தில் புதிய நிழற்குடை அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், சமூக அமைப்புகள், நிழற்குடையை அமைத்து தருவதற்கு முன் வந்துள்ளன. இதற்கு எம்.எல்.ஏ.,வும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு தருவார்களா?