Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரா கிளைடர் விழுந்து விபத்து பாண்டி மெரினாவில் பரபரப்பு

பாரா கிளைடர் விழுந்து விபத்து பாண்டி மெரினாவில் பரபரப்பு

பாரா கிளைடர் விழுந்து விபத்து பாண்டி மெரினாவில் பரபரப்பு

பாரா கிளைடர் விழுந்து விபத்து பாண்டி மெரினாவில் பரபரப்பு

ADDED : செப் 15, 2025 02:09 AM


Google News
புதுச்சேரி: பாரா கிளைடர் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சுற்றுலா பயணிகளை கவர்ந்திட அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பாரா கிளைடர் மூலம் சுற்றுலா பயணிகள் பறந்து புதுச்சேரி நகரின் அழகை கண்டுகளிக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேங்காய்திட்டு பகுதியில் தனியார் மூலம் பாரா கிளைடர் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு பாண்டி மெரினா பகுதியில் 20 அடி உயரத்தில் பறந்த பாரா கிளைடர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அதனைக் கண்ட அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்.

தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார் விரைந்து சென்று, பாரா கிளைடரில் இருந்து கீழே விழுந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஓயஸ்பாய், 39; நேற்று தனது உதவியாளருடன் பாரா கிளைடரை இயக்கியபோது, அவரது கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார், அஜாக்கரதையாகவும், கவனக்குறைவாகவும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாரா கிளைடரை இயக்கியதாக, ஆபரேட்டர் ஓயஸ்பாய் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக, சுற்றுலாத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us