/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து துறையில் பேன்சி எண் ஏலம் போக்குவரத்து துறையில் பேன்சி எண் ஏலம்
போக்குவரத்து துறையில் பேன்சி எண் ஏலம்
போக்குவரத்து துறையில் பேன்சி எண் ஏலம்
போக்குவரத்து துறையில் பேன்சி எண் ஏலம்
ADDED : ஜூன் 03, 2025 12:10 AM
புதுச்சேரி: போக்குவரத்து துறையில் பேன்சி எண் ஏலம் வரும் 10ம் தேதி விடப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி போக்குவரத்து துறையின் பி.ஒய்-05 ஏஏ (உழவர்கரை) வரிசையில், https://parivahan.gov.in/fancy இணைய தளத்தில் வரும் 10ம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 4.30 வரை ஏலம் விட இருக்கிறது.
இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் (User Name),கடவுச்சொல் https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் New Public User மூலமாக நாளை 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே வரும் 10ம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறும் ஏலத்தில் பங்கு பெறலாம்.
இந்த இ-ஆக் ஷன் முறையில் பங்கு பெற விரும்பும் பொது மக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை நாளை 4ம் தேதி முதல் https://transport.pv.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத் தொகையின் விவரம், எப்.எம்.பி., யின் விபரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இது சம்பந்தமான இதர விபரங்களை போக்குவரத்துத் துறை அலுவலகம் 0413-2280170,236 எண்ணில் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட எண் முன்பதிவு செய்யப்பட்ட வாகனம் அந்த எண்ணை முன்பதிவு செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பதிவு செய்ய தவறினால் அத்தகைய முன்பதிவு செயலிழந்து விடும் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் அவரது உரிமையை இழந்துவிடும். இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன்லைன் பேமெண்ட் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ அல்லது காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது.