Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

ADDED : ஜூன் 28, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நெட்டப்பாக்கம் : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டம் சார்பில், தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி முகாம், கரியமாணிக்கம் உழவர் உதவியகத்தில் நடந்தது.

பாகூர் கோட்ட வேளாண் துறை இயக்குனர் குமரவேல் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் திருநாடன் வரவேற்றார்.

இயற்கை விவசாயம் ஒருங்கிணைப்பாளர் யாழினி, இயற்கை விவசாயம் செய்தல், அவற்றின் அவசியம் குறித்து பேசினார்.

புதுச்சேரி இயற்கை இடுபொருள் நிலையம் சார்பில், சேதுராமன் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தில் இனக்கவர்ச்சி கருவிகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.

முன்னோடி விவசாயி கலாநிதி இயற்கை விவசாயம் முக்கியத்துவம் குறித்தும், உற்பத்தி பொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் கரியமாணிக்கம், பண்டசோழநல்லார், மொளப்பாக்கம், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். ஏபாடுகளை களப்பணியாளர்கள் ரங்கநாதன், வெங்கடாச்சலம் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆத்மா மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us