/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வித்துறையை கண்டித்து போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு கல்வித்துறையை கண்டித்து போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
கல்வித்துறையை கண்டித்து போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
கல்வித்துறையை கண்டித்து போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
கல்வித்துறையை கண்டித்து போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பு
ADDED : ஜூன் 30, 2025 04:17 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை;
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் மூடு விழா நோக்கி செல்கின்றன. பல அரசு பள்ளிகளில் விரிவுரையாளர்கள் ஒரு வாரத்தில் இரு வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் தனி ஆசிரியர் நியமிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு போல், புதுச்சேரியில் 9ம் வகுப்பு வரை முழு தேர்ச்சி அறிவிக்க வேண்டும். மாநில பாடத்திட்டத்தை மீண்டும் பின்பற்ற வேண்டும். அவசரக் கோலத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையினால் இன்று புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மதிய உணவுத் திட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஊட்டச்சத்து இல்லாத உணவு வழங்கப்படுகிறது. ஆகையால் மதிய உணவுத் திட்டத்தை அரசே முழுமையாக நடத்த வேண்டும். யோகா, நுண்கலை, கணினி, விளையாட்டு, ஓவியம் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கடந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்ற 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 37 இடங்களில் 14 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 23 இடங்களை யார் பயன்படுத்தினர் என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த கல்வியாண்டில் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையால், கல்வித்துறை 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. மாணவர்களின் எதிர்காலம், கல்வித்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.