ADDED : செப் 26, 2025 04:50 AM

புதுச்சேரி:முத்தரையர்பாளையம் அருள்செல்வி ஆயிஅம்மாள் அரசு நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி எலைட்ஸ் சங்கத்தின் சார்பில்,புதிதாக கட்டப்பட்ட கழிவறை திறப்பு விழா நடந்தது.
எலைட்ஸ் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
ஆனந்தன், துணை ஆளுநர் அருண்தீப்பாய்ந்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சரோஜினி வரவேற்றார்.
இந்த திட்டத்திற்கு ஏற்பாடு செய்து பொருள் உதவி செய்து, பணியை முடித்து கொடுத்த உறுப்பினர்கள் சந்திரசேகர், இளங்கோ, செல்வேல்சேகர், மோகன்ராஜ், சரண்ராஜ் மற்றும் முன்னாள் தலைவர்கள் ஜெயக்குமார், புகேழந்தி, பச்சைநாயகம், உறுப்பினர்கள் பாரதி, பிரகாஷ், சத்யநாராயணன், ராதாக்கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.