/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் கல்வி அறை திறப்பு விழா அரசு பள்ளியில் கல்வி அறை திறப்பு விழா
அரசு பள்ளியில் கல்வி அறை திறப்பு விழா
அரசு பள்ளியில் கல்வி அறை திறப்பு விழா
அரசு பள்ளியில் கல்வி அறை திறப்பு விழா
ADDED : செப் 27, 2025 01:49 AM

புதுச்சேரி : சின்னையன்பேட் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையர் பராமரிப்பு மற்றும் கல்வி அறை திறப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சரஸ்வதி வரவேற்றார். வட்டம் ஒன்றின் பள்ளித் துணை ஆய்வாளர் அனிதா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து, முன் மழலையர் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்கள் ஜங்க் புட் சாப்பிடக்கூடாது, நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் அறிவுறுத்தினார்.
இதில், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சடாச்சரதேவி, திவ்யபிரியா, பாரதி, சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.


