/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கடற்கரையில் வெட்டவெளி தியானம் புதுச்சேரி கடற்கரையில் வெட்டவெளி தியானம்
புதுச்சேரி கடற்கரையில் வெட்டவெளி தியானம்
புதுச்சேரி கடற்கரையில் வெட்டவெளி தியானம்
புதுச்சேரி கடற்கரையில் வெட்டவெளி தியானம்
ADDED : மே 13, 2025 06:09 AM

புதுச்சேரி : புதுச்சேரி, ஓங்கார ஆசிரமம் சார்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று வெடவெளி தியானம் புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்தது.
ஆசிரமத்தின் அதிபர் கோடீஸ்வரானந்தா வரவேற்றார். பின் ஓங்காரநந்தா அருளிய 107வது அருள் நுாலான தெரிந்தும் தெரியாததும் வெளியிடப்பட்டது. பிரவணகுமாரி(எ) துறவி லட்சுமிபாய், உமா மகேஸ்வரன், குமாராகவன் ஆகியோரின் திருவுருப்படங்களை ஓங்கார ஆசிரமத்தின் ஓங்காரநந்தா திறந்து வைத்தார். ஆசிரமத்தின் அறங்காவலர்கள் சர்வாத்மானந்தா, பேராசிரியர் சுகுமாரன் , சிதம்பரம் பி.எஸ்.என்.எஸ்., பொறியாளர் குருமூர்த்தி, இ.ஜி.ஏ.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளி முதல்வர் கல்யாணி குருமூர்த்தி வெட்டவெளி தியானத்தின் அனுபவங்களை குறித்து பேசினர்.
ஆசிரமத்தின் தொண்டர்கள் கருணாகரன், ராஜமாதா பிரேமலதா தேவி, தங்கமுத்து ராம்குமார் ஆகியோர் தியானத்தின் பயண்கள் குறித்து பேசினர். சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். ஆசிரமத்தின் ஓங்காரநந்தா வெட்ட வெளி தியானத்தை பயிற்றுவித்து, தியானம் செய்ய ஆசி வழங்கினார்.
ஓங்கார ஆசிரமத்தின் சட்ட ஆலோசகர் நீதிஷ்குமார் நன்றி கூறினார்