/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ. 6.92 லட்சம் மோசடி ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ. 6.92 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ. 6.92 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ. 6.92 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ. 6.92 லட்சம் மோசடி
ADDED : மே 11, 2025 11:32 PM
புதுச்சேரி: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, புதுச்சேரியை சேர்ந்த நபர் ரூ.6.92 லட்சம் மோசடி கும்பலிடம் ஏமாந்தார்.
புதுச்சேரியை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.
இதைநம்பிய அந்த நபர் மர்மநபர் அனுப்பிய லிங்க் மூலம் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பல தவணைகளாக 6 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்து வந்தார்.
அதன் மூலம் கிடைத்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், புதுச்சேரியை சேர்ந்த ஒருவர், சென்னையில் தங்கி வேலை செய்ய ஆன்லைனில் விடுதி தேடியுள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர், அவரை தொடர்பு கொண்டு, அறை இருப்பதாகவும், முன்பதிவு செய்யவும், பராமரிப்பு பணிக்காகவும் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மர்ம நபருக்கு 50 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.