/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார் மோதி ஒருவர் பலி: இருவர் காயம் கார் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்
கார் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்
கார் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்
கார் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்
ADDED : மே 31, 2025 11:39 PM
காரைக்கால்: காரைக்கால், திருநள்ளார்பேட்டை, மணல்மேட்டு தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் மகன் பிருத்திவிராஜ், 33; டிரைவரான இவர், புதுச்சேரியில் தங்கி சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சொந்த ஊரான காரைக்காலுக்கு வந்தார்.
பிருத்திவிராஜ் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 25; விக்னேஷ், 23, ஆகியோருடன் பைக்கில் கடற்கரைக்கு சென்றார். பைக்கை பிருத்திவிராஜ் ஓட்டினார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் பைக் மீது மோதியது.
மூவரும் துக்கி வீசப்பட்டனர்.
காயமடைந்த மூவரும் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிருத்திவிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயம் அடைந்த இருவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.