/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா துவங்கியதுபுதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா துவங்கியது
புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா துவங்கியது
புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா துவங்கியது
புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா துவங்கியது
ADDED : ஜன 03, 2024 06:35 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்குபுத்தாண்டு தினத்தில் இருந்து,ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாதுவங்கியது.
இதுதொடர்பாக, சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அளித்த பேட்டி:
புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு செல்ல, நாள்தோறும் பி.ஆர்.டி.சி., தமிழகம் மற்றும் ஆந்திர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்புதுச்சேரி - திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா செல்ல,புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், சிறப்பு சேவை, நேற்று முன்தினத்தில் இருந்து துவங்கியது.
இந்த பயணம், புதுச்சேரி கடற்கரை சாலை, லால்பகதுார் சாஸ்திரி சாலை சந்திப்பு எண்:2, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தில் இருந்து நாள்தோறும் அதிகாலை 4:00 மணிக்கு துவங்குகிறது.
குளிரூட்டப்பட்ட வாகனத்தில் புறப்பட்டு திருமலை திருப்பதிக்கு சென்று, சிறப்பு தரிசனம் மூலம், வெங்கடேசப்பெருமாள் மற்றும் அலமேல்மங்கை தாயாரை தரிசனம் செய்து விட்டு, அன்று நள்ளிரவில் புதுச்சேரியை வந்தடைகிறது.
திருமலை திருப்பதிக்கு செல்ல விரும்பும் ஆன்மிக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் www.ptdconline.com என்ற இணையதளத்தின் மூலம் பயண தேதிக்கு குறைந்தபட்சம், 7 நாட்களுக்கு முன்னதாக தங்களுக்கான சீட்டினை முன்பதிவு செய்து கொண்டு பயணத்தை மேற்கொள்ளலாம்.
காலை சிற்றுண்டி, மதிய உணவு, திருமலை திருப்பதி சிறப்பு தரிசனக்கட்டணம் உள்ளிட்டவைகளுடன், குளிரூட்டப்பட்ட வாகனத்தில் பயணிக்கும்ஒரு நபருக்கு, ரூ.2,700 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி., கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு டிக்கெட் இல்லை. கூடுதல் விபரங்களுக்கு, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.