ADDED : ஜூன் 26, 2025 12:54 AM

புதுச்சேரி, : புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ஒலிம்பிக் விழா லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
விழாவிற்கு, சங்க தலைமை நிலை அதிகாரி முத்துகேசவலு தலைமை தாங்கினார். சங்க பொது செயலாளர் தனசேகர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பளராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வெளிநாடு, வெளி மாநிலம் சென்று ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
சபாநாயகர் செல்வம் சிறப்புரையாற்றினார். விழாவில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொருளாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.


