ADDED : ஜன 03, 2024 06:33 AM
அரியாங்குப்பம் : பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை அடுத்த நைனார்மண்டபம் சுதானா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி லலிதா, 68; இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
நோய் குணமாகாத விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, முதலியார்பேட்டைபோலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.