/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தில் ஆபாச படம்; பக்தர்கள் கடும் அதிர்ச்சிகாரைக்கால் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தில் ஆபாச படம்; பக்தர்கள் கடும் அதிர்ச்சி
காரைக்கால் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தில் ஆபாச படம்; பக்தர்கள் கடும் அதிர்ச்சி
காரைக்கால் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தில் ஆபாச படம்; பக்தர்கள் கடும் அதிர்ச்சி
காரைக்கால் கோவில் 'பேஸ்புக்' பக்கத்தில் ஆபாச படம்; பக்தர்கள் கடும் அதிர்ச்சி
ADDED : ஜன 05, 2024 06:38 AM
புதுச்சேரி : திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பேஸ்புக்கில் ஆபாச புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிப்பெயர்ச்சி முடிந்த சூழ்நிலையில், காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவில் பேஸ்புக் பக்கத்தில் கோவிலின் பொது நிகழ்ச்சி, சுவாமி உற்சவ புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பேஸ்புக் முகப்பு பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன், மர்ம நபர்கள் ஆபாச படத்தை பதிவிட்டிருந்தனர். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காரைக்கால் சைபர் கிரைம் போலீசார், பேஸ்புக் நிறுவனத்தை அணுகி கோவில் பேஸ்புக் ஸ்டோரி பக்கத்தில் இருந்த ஆபாச படத்தை நீக்கினர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'தர்பாரண்யேஸ்வரர் கோவில் 'பேஸ்புக் ேஹக்' செய்யப்படவில்லை. கோவில் பேஸ்புக் பக்கத்கில் மூன்று அட்மின்கள் வழியாக அவ்வப்போது கோவில் சார்ந்த ஆன்மிக புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது.
இந்த மூன்று அட்மின்களில் ஒருவரிடமிருந்து ஆபாச படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்மின்களின் தவறினால் நடந்ததா அல்லது வேறு நபர்கள் அட்மின்களின் மொபைல் போனை வாங்கி செய்தனரா என விசாரித்து வருகிறோம்.
மேலும், கோவில் பேஸ்புக்கின் அக்கவுண்ட் பாஸ்வேர்டு தெரியவில்லை. எனவே கோவில் பேஸ்புக் பக்கத்தை மீட்க, பேஸ்புக் நிறுவனத்தை அணுகியுள்ளோம்' என்றனர்.