/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊட்டசத்து வார விழா

ஊட்டசத்து வார விழா

ஊட்டசத்து வார விழா

ஊட்டசத்து வார விழா

ஊட்டசத்து வார விழா

ADDED : அக் 11, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன செவிலியர் கல்லுாரியில் உலக மனநல தினம், தேசிய ஊட்டச்சத்து வார விழா கொண்டாடப்பட்டது.

கல்லுாரி இயக்குனர் உதய சங்கர் தலைமை தாங்கினார். செவிலிய கல்லுாரி துணை பேராசிரியர் கணேஷ் வரவேற்றார். செவிலிய கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் மனநல குறித்து பேசினார்.

மனநல பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரி மதன் மனநலன் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இதேபோல் தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி செவிலியர் மாணவர்களின் இன்றியமையாத ஊட்டச்சத்து உணவு கண்காட்சி நடந்தது. கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் பார்வையிட்டனர்.

மருத்துவ கல்லுாரி முதல்வர் ராமச்சந்திர பட், துணை பதிவாளர் சாந்தி, அன்னை தெரசா சுகாதார நிறுவனத்தின் மருத்துவ ஆய்வு கூட பிரிவின் முதல்வர் திருமுருகன், செவிலிய பள்ளி முதல்வர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை பேராசிரியை நித்யா நன்றி கூறினார்.