/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நீட்டிக்க என்.ஆர்., பேரவை வலியுறுத்தல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நீட்டிக்க என்.ஆர்., பேரவை வலியுறுத்தல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நீட்டிக்க என்.ஆர்., பேரவை வலியுறுத்தல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நீட்டிக்க என்.ஆர்., பேரவை வலியுறுத்தல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நீட்டிக்க என்.ஆர்., பேரவை வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 04:51 AM
திருபுவனை: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என, என்.ஆர்., இலக்கிய பேரவை வலியுறுத்தியுள்ளது.
இலக்கியப் பேரவைத் தலைவர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை;
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு 1,828 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதனை முறையாக முதல்வர் ரங்கசாமி பல்வேறு திட்டங்களை தீட்டி, பயன்படுத்துவதற்கு வழிவகை செய்தார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் சில பொது நல அமைப்புகள் தங்கள் சுயலாபத்திற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை கண்டிக்கிற அதே நேரத்தில் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மாறாக புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள், எதிரி கட்சிகளாக செயல்பட்டு வருகின்றன. முதல்வருக்கு, மக்கள் மத்தியில் நல்ல பெயர் வந்து விடுமோ என்ற நோக்கத்தில் தடையாக இருந்து வருகின்றனர். மக்களுக்கான பணிகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பாக செய்து வருகிறது என்.ஆர்.காங்., அரசு. இதனை மக்கள் உணர்ந்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டு என, மத்திய அரசையும், கூட்டணி கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.