/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்புபுதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
ADDED : ஜன 10, 2024 10:58 PM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில் இரண்டு இடங்களில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள புதிய டிரான்ஸ்பார்மர்களை பாஸ்கர் எல்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் தொகுதி, முருங்கப்பாக்கம் சேத்திலால் நகர், அன்னை தெரேசா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.
எம்.எல்.ஏ., வின் முயற்சியால், சேத்திலால் நகர் மற்றும் அன்னை தெரேசா நகர் ஆகிய இரண்டு பகுதிகளில் தலா ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புதிய டிரான்ஸ்பார்மர்கள் மின்துறை மூலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய டிரான்ஸ்பார்மரை பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், இளநிலை பொறியாளர் செல்வபாண்டியன், உதவிப்பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.