/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய பி.ஆர்.டி.சி., பஸ்கள் பராக்... பராக்...புதிய பி.ஆர்.டி.சி., பஸ்கள் பராக்... பராக்...
புதிய பி.ஆர்.டி.சி., பஸ்கள் பராக்... பராக்...
புதிய பி.ஆர்.டி.சி., பஸ்கள் பராக்... பராக்...
புதிய பி.ஆர்.டி.சி., பஸ்கள் பராக்... பராக்...
ADDED : பிப் 11, 2024 02:15 AM

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் இயக்கும் பி.ஆர்.டி.சி.,பஸ்சுகளுக்கு அனைத்து வழித்தடங்களிலும் தனி மவுசு உண்டு. வழியில் எங்கும் நிறுத்தாமல் பாயிண்ட் டூ பாயிண்டாக சீக்கிரமாக கொண்டு சென்று விட்டுவிடுவர். இதனால் மற்ற பஸ்சுகளில் ஏறாமல் பி.ஆர்.டி.சி பஸ்சுக்கு காத்திருத்து செல்வோரும் உண்டு.
கொரோனா ஊடரங்கிற்கு பிறகு தலைகீழாக மாறிவிட்டது. நீண்ட நாட்களாக பி.ஆர்.டி.சி., பஸ்சுகளை பராமரிக்காமல் விட்டதால் ஆங்காங்கே பி.ஆர்.டி.சி.,பஸ்கள் கியர் பாக்ஸ், பிரேக் புஷ் மக்கர் செய்து நின்றன.
இந்நிலையில் புதிதாக பி.ஆர்.டி.சி., நிறுவனத்திற்கு புதுபொலிவு தரும் வகையில் 17.5 கோடியில் 38 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இதனால் பி.ஆர்.டி.சியில், ஓட்டை உடைசல் பஸ்கள் ஓரம் கட்டப்பட்டு, இந்த புதிய பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் விரைவில் இயக்கப்பட உள்ளன.
இந்த டீசல் பஸ்கள் அனைத்தும் பெங்கரூருவில் பாடி கட்டிய நிலையில் அதில் நான்கு பஸ்கள் பணிகள் முடிந்து புதுச்சேரிக்கு வந்துள்ளன. பி.ஆர்.டி.சி.,பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள இந்த பஸ்கள் அனைத்தும் நீல நிறத்தில் கம்பீரமாக வசீகரிக்கின்றன.
பி.ஆர்.டி.சி., பெயர்கள் வெள்ளை நிறத்தில் மின்னுகின்றன.
20ம் தேதிக்கு பிறகு மீதமுள்ள அனைத்து பஸ்களும் பாடிகட்டும் பணி முடிந்து புதுச்சேரிக்கு வந்துவிடும் என்பதால் மார்ச் 1ம் தேதி முதல் புதிய பஸ்கள் அனைத்தும் இயங்க உள்ளன.
இது, பயணியர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.