Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் முருகன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

வில்லியனுார் முருகன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

வில்லியனுார் முருகன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

வில்லியனுார் முருகன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

ADDED : மார் 17, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
வில்லியனுார்: வில்லியனுார் சிவசுப்ரமணியர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர்.

வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவில் நிர்வாகம் சார்பில், ரூ. 30 லட்சம் செலவில் 27 அடி உயரம் கொண்ட புதிய தேர் செய்துள்ளனர்.

இந்த புதிய தேர் வெள்ளோட்ட வைப விழாநேற்று காலை நடந்தது.

முன்னதாக கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணியன் மற்றும் திருக்காஞ்சி கோவில் தலைமை குருக்கள் சரவணன் தலைமையில் சுவாமிகளுக்கும், புதிய தேருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதனை தொடர்ந்து வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

தேர் கோவில் வளாகத்தில் துவங்கி, பரசுராமபுரம், வில்லியனுார் மாட வீதிகள் வழியாக சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

ஏற்பாடுகளை கோவில் கவுரவ தலைவர்கள் செந்தாமரைக்கண்ணன், லட்சுமி நாராயணன், தேர் கமிட்டி தலைவர் பாண்டியன், நிர்வாக தலைவர் முருகையன், உதவி தலைவர்கள் ஆறுமுகம், வரதராஜ், பழனியப்பன், செயலாளர்கள் செல்வம், ஏழுமலை, பொருளாளர்கள் பழனிராஜா, ராஜேந்திரன், விழா குழு தலைவர் சரவணன், உதவி செயலாளர்கள் சரவணன், கிருஷ்ணராஜ், மண்டப பொருப்பாளர் பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக தேர் செய்த ஸ்தபதி ரங்காச்சாரியை கவுரவபடுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us