/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பல்கலை சமுதாய கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு நிறைவுபல்கலை சமுதாய கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு நிறைவு
பல்கலை சமுதாய கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு நிறைவு
பல்கலை சமுதாய கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு நிறைவு
பல்கலை சமுதாய கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு நிறைவு
ADDED : பிப் 24, 2024 06:32 AM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலை சமுதாய கல்லுாரியில் தேசிய கருத்தரங்கின் நிறைவு விழா நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக்கல்லுாரியின் விளையாட்டு யோகாத்துறை மற்றும் ஸ்ரீபெரும்புதுார், ராஜிவ்காந்தி தேசிய இளைஞர்கள் முன்னேற்ற துறை சார்பில், தேசிய கருத்தரங்கு, சமுதாய கல்லுாரியில், 'முதலுதவி மற்றும் விளையாட்டு' எனும் தலைப்பில் கடந்த, 20ம் தேதி துவங்கியது.
மூன்று நாட்கள் நடந்த கருத்தரங்கு, நேற்று நிறைவு பெற்றது.
இதன் நிறைவு விழாவில், புதுச்சேரி பல்கலை விளையாட்டுத்துறை இயக்குனர் இளையராஜா தலைமை வகித்தார். பொறுப்பு இயக்குநர் சந்திர சேகர ராவ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர் முருகேசன், மற்றும் மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் ஜெகதீஸ்வரி, விழா ஏற்பாடுகளை மேற்கொண்டார்.