தேசிய கண்தான விழிப்புணர்வு முகாம்
தேசிய கண்தான விழிப்புணர்வு முகாம்
தேசிய கண்தான விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 12, 2025 03:52 AM

புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி நாராயண மருத்துவ கல்லுாரியில் தேசிய கண்தான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாரத் கல்வி குழும தலைவர் சந்தீப் ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்த நிகழ்ச்சியை கல்லுாரி தலைமை செயல் அதிகாரி அன்பு, மருத்துவமனை டீன் ஜெயலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் ஆசையாஸ் போஸ்கோ சந்திரகுமார் மற்றும் துறை தலைவர் கலைச்செல்வி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கண் தானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் குறும்படங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கண்களை தானம் செய்வது, பார்வையை பரிசளிப்பது என்ற தலைப்பில் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.