/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நல்லவாடு, வீராம்பட்டிணம் கடற்கரையில் தீர்த்த வாரிநல்லவாடு, வீராம்பட்டிணம் கடற்கரையில் தீர்த்த வாரி
நல்லவாடு, வீராம்பட்டிணம் கடற்கரையில் தீர்த்த வாரி
நல்லவாடு, வீராம்பட்டிணம் கடற்கரையில் தீர்த்த வாரி
நல்லவாடு, வீராம்பட்டிணம் கடற்கரையில் தீர்த்த வாரி
ADDED : பிப் 25, 2024 04:54 AM

அரியாங்குப்பம், : நல்லவாடு, வீராம்பட்டிணம் கடற்கரை பகுதியில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசி மகத்தையொட்டி, நல்லவாடு, வீராம்பட்டிணம் கடற்கரை பகுதிகளில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில், நல்லவாடு, தில்லையம்மன் கோவில்களின் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக சென்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
மேலும், தவளக்குப்பம், டி.என்., பாளையம் உட்பட பல பகுதிகளில் இருந்து உற்சவமூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதே போல், வீராம்பட்டினம் கடற்கரையில் செங்கழுநீர் அம்மனுக்கு தீர்த்த வாரி நடந்தது. அரியாங்குப்பம் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் தீர்த்திவாரியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீனவர்கள் சார்பில், சுவாமிகளுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது.