/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.பி., குழுக்களின் வருகை பரபரப்பு தகவல் அம்பலம்எம்.பி., குழுக்களின் வருகை பரபரப்பு தகவல் அம்பலம்
எம்.பி., குழுக்களின் வருகை பரபரப்பு தகவல் அம்பலம்
எம்.பி., குழுக்களின் வருகை பரபரப்பு தகவல் அம்பலம்
எம்.பி., குழுக்களின் வருகை பரபரப்பு தகவல் அம்பலம்
ADDED : பிப் 25, 2024 04:51 AM
பார்லிமெண்ட் குழுவினர் புதுச்சேரி வருகை பெரிய அளவில் கொண்டாடப்படாதது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்.பி.,க்கள் 30 பேர் அடங்கிய குழுவினர், கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் முகாமிட்டு ஆய்வு செய்வர் என, மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை, 30 எம்.பி.க்களை கொண்ட பார்லிமெண்ட் குழுவினர் ஆய்வு செய்தனர்.
வழக்கமாக ஒரு எம்.பி., புதுச்சேரி வந்தால் கூட பெரிய அளவில் வரவேற்று விளம்பரம் செய்யும் அரசு, பத்திரிக்கையாளர்களை கூட கூட்டத்திற்கு அழைக்கவில்லை; அனுமதிக்கவில்லை. எம்.பி.,க்களின் பயணம் அரசு பணயமாக இருந்தாலும், இரண்டு நாள் பயணமும் பரம ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது.
பார்லிமெண்ட் குழு வந்த அதே தேதியில், லாங்குவேஜ் குழுவும் புதுச்சேரிக்கு வந்திருந்தது. அந்த பயணமும் பரம ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
எம்.பி.,க்களின் பாதுகாப்பிற்காக இப்படி செய்யப்பட்டது என்று கருதினாலும், அனைத்து எம்.பி.,க்களும் அனைத்து இடங்களுக்கும் பொதுமக்களை போலவே இயல்பாகவே சென்று வந்தனர்.
இதுகுறித்து, அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'லாங்குவேஜ் கமிட்டி அலுவலக மொழியாக இந்தி எந்தளவிற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வந்திருந்தது.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் இது தெரிந்தால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் முற்றிலும் இரண்டு குழுக்களின் வருகையும் ரகசியமாக வைக்கப்பட்டு விட்டது. தவிர இரண்டு குழுக்களின் சேர்மனும் வருகையை பெரிதுபடுத்த வேண்டாம் என, கேட்டுக்கொண்டனர்.
இதன் காரணமாகவே,பார்லிமெண்ட் குழுக்களின் வருகை குறித்த தகவல்கள் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை' என்றனர்.